Sunday, March 3, 2024

LEO Trailer – வெறிபிடித்து வேட்டையாடும் லியோ தாஸ்.. மிரட்டும் லியோ ட்ரெய்லர்

LEO Trailer – லியோ ரிலீஸுக்காக மாதக்கணக்கில் காத்திருந்த ரசிகர்கள் இப்போது ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். விஜய், லோகேஷ் கூட்டணியில் படு மாஸாக உருவாகி இருக்கும் இதன் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என்ற அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பே வெளியானது.
LEO Trailer வெறிபிடித்து வேட்டையாடும் லியோ தாஸ்.. மிரட்டும் ட்ரெய்லர்
LEO Trailer வெறிபிடித்து வேட்டையாடும் லியோ தாஸ்.. மிரட்டும் ட்ரெய்லர்

ஆனால் டைம் என்ன என்பதை மட்டும் தயாரிப்பு தரப்பு தெரிவிக்கவில்லை. இதனாலயே வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு காத்திருந்த ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் ட்ரெய்லர் தற்போது ஆரவாரமாக வெளியாகி இருக்கிறது.

அதன்படி ட்ரெய்லரின் ஆரம்பமே விஜய்யின் குரலில் கதை சொல்வது போல் தொடங்குகிறது. அதை தொடர்ந்து காஷ்மீரில் நடக்கும் வன்முறையும், சீரியல் கில்லர் அர்ஜுனின் வெறித்தனமான ஆட்டமும், சஞ்சய் தத்தின் வில்லத்தனம் என ஒவ்வொன்றும் ஆக்ரோஷ தாண்டவமாக இருக்கிறது.

LEO Trailer வெறிபிடித்து வேட்டையாடும் லியோ தாஸ்.. மிரட்டும் ட்ரெய்லர் 2
LEO Trailer வெறிபிடித்து வேட்டையாடும் லியோ தாஸ்.. மிரட்டும் ட்ரெய்லர் 2

அவர்களை எதிர்த்து நிற்கும் விஜய், அவருடைய மனைவி த்ரிஷா மற்றும் குழந்தை, போலீஸ் ஆபீஸர் கௌதம் மேனன் என முக்கிய கேரக்டர்களும் மிரள வைக்கிறது. அதன்படி இரண்டு விஜய் என்று பலரும் யூகித்தது போல் டைலரிலேயே ஹின்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் லியோ, பார்த்திபன் என்ற இரு கதாபாத்திரங்களில் மிரட்டும் விஜய்யின் ருத்ரதாண்டவம் வீடியோ முழுவதும் தெறிக்கிறது. இப்படியாக அனல் பறக்க வெளிவந்துள்ள லியோ ட்ரெய்லர் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

LEO Trailer வெறிபிடித்து வேட்டையாடும் லியோ தாஸ்.. மிரட்டும் ட்ரெய்லர் 1
LEO Trailer வெறிபிடித்து வேட்டையாடும் லியோ தாஸ்.. மிரட்டும் ட்ரெய்லர் 1

இந்த படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகிறது.

குறிப்பாக பார்த்தி என்ற பெயரில் ஒரு விஜய்யையும், லியோ என்ற பெயரில் ஒரு விஜய்யையும் ட்ரெய்லரில் அறிமுகப்படுத்துகிறார்கள். எனவே இதில் விஜய் டபுள் ஆக்‌ஷனா இல்லை டபுள் கெட்டப்பா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. ஆகமொத்தம் படத்தில் பயங்கரமான ட்விஸ்ட் இருப்பது ட்ரெய்லரை பார்க்கும்போது புரிகிறது.

leo trailer

லியோ படத்தை செவன் ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோ சார்பாக லலித் குமார் தயாரித்துள்ளார். லியோ படத்திலிருந்து ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள நிலையில் தற்போது ட்ரெய்லரை வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.

சன் டிவியின் யூடியூப் சேனலில் சுமார் 25 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளதால், லியோ ட்ரெய்லர் வியூஸில் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles