Sunday, May 19, 2024

கோட்டாபயவை பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் சதி அம்பலம்!

கோட்டாபயவை பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் சதி அம்பலம்!

கோட்டாபயவை பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் சதி அம்பலம்! - Dailymirror News - 24x7 Daily mirror Breaking News Website

செல்வாக்கு மிக்க வெளிநாட்டு நிறுவனங்கள், சில உள்ளூர் குழுக்களுடன் இணைந்து, ஜனாதிபதி பதவியில் இருந்து தம்மை வெளியேற்றும் நோக்கில் செயற்பட்டதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தற்போது, இலங்கையில் கிடைக்கும் கோட்டாபய ராஜபக்சவின் “என்னை அதிபர் பதவியில் இருந்து வெளியேற்ற சதி” என்ற நூலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும் அந்த புத்தகத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,

“கணிசமான நிதி ஆதரவால் என்னை பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகள் மேலும் வலுப்பெற்றதோடு வெளிநாட்டு சக்தி ஒன்று என்னை பதவி விலக வேண்டாம் என கடுமையாக வலியுறுத்தியிருந்தது.

மிரிஹான போராட்டம்

இந்த வெளிநாட்டு நிறுவனம் இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளது.

சில செல்வாக்குமிக்க நாடுகள் உலக அரங்கில் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியின் வெற்றியாளர்களாக தங்களைக் காட்டிக் கொள்கின்றன.

மிரிஹானவில் உள்ள எனது இல்லத்திற்கு வெளியே 2022 மார்ச் 31ஆம் திகதியன்று நடத்தப்பட்ட போராட்டம் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருந்தது.

அதேவேளை, இரவு 8:00 மணியளவில் பங்கிரிவத்தை வீதியை அடைந்த ஊர்வலத்தில் கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, கொழும்பில் உள்ள சங்ரிலா விருந்தகத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் அப்போதைய இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன மற்றும் அனைத்து ஆயுதப் படைத் தளபதிகளும் கலந்துகொண்டனர்.

பிறப்பிக்கப்படாத உத்தரவு

இந்நிலையில், சவேந்திரா மற்றும் கமல் இருவரிடமும் குறித்த நிலைமை குறித்து உடனடியாக தெரிவிக்கப்பட்டது.

அதனையடுத்து, திருமண நிகழ்வில் கலந்து கொண்ட அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் சுரேஸ் சாலியும் மிரிஹான பகுதிக்கு விஜயம் செய்தார்.

அவர் அங்கு சென்றபோது, ஏறக்குறைய நூறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்துகொண்டிருந்தனர். பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவ அதிகாரிகள் இருந்த போதிலும், கூட்டத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து வெளிப்படையான அறிவுறுத்தல்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

இதன்போது, சவேந்திர சில்வா மற்றும் கமல் குணரத்ன ஆகியோருடன் சுரேஸ் சாலி வீடியோ அழைப்பை மேற்கொண்டார். எனினும் துரதிர்ஷ்டவசமாக, கூட்டத்தை கலைப்பதற்கான எந்த உத்தரவும் மூத்த அதிகாரிகளிடமிருந்து அனுப்பப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதியின் கூற்றுப்படி, மறுநாள் முற்பகல் 10.30 மணியளவில் இராணுவத் தளபதி, பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் அவரது இல்லத்திற்குச் சென்றனர்.

2022ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் திகதி, பாதுகாப்புப் படைத் தலைமையகத்திலிருந்து ஜனாதிபதி மாளிகைக்கு தமது செயற்பாட்டு அறையை மாற்றுமாறு பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவுக்கு நான் அறிவுறுத்தினேன்.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சதி

2022 மே 9ஆம் திகதி, இரவு அலரிமாளிகையில் பிரதமரை வெளியேற்றுவதில், மன்னிக்க முடியாத காலதாமதம் ஏற்பட்டதால், அனைத்து பாதுகாப்புத் தலைவர்களையும் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்தோம்.

2022ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி காலை, ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டிருந்த செயற்பாட்டு அறையில், பாதுகாப்புச் செயலாளர், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள், பொலிஸ் அதிபர் மற்றும் புலனாய்வுத்துறையின் இயக்குநர் ஆகியோர் இருந்தனர்.

அனைத்து அணுகு சாலைகளையும் மறித்து போராட்டக்காரர்கள் கொழும்புக்கு வருவதைத் தடுக்க இதன்போது திட்டமிடப்பட்டது எனினும், அத்தகைய சாலைத் தடைகள் எதுவும் நிறுவப்படவில்லை.

எனவே, எதிர்பாளர்கள் ஜனாதிபதி மாளிகையில் கிட்டத்தட்ட எதிர்ப்பின்றி குவிந்தனர். மூழ்கும் கப்பலை தாம் தனியாக கைவிட்டதாக சிலர் கூறினாலும், தாம் பதவி விலகும் போது இலங்கை வீழ்ச்சியடைந்த நிலையில் இல்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டியது அவசியமானது.

2022 மார்ச் – ஏப்ரலில் தன்னை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதை நோக்கமாகக் கொண்டு உன்னிப்பாக திட்டமிடப்பட்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சதியை நான் எதிர்கொண்டேன்.

இந்த சூழ்நிலையில், தனது பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்காக ஒரு உயிரை தியாகம் செய்வது வீண் என்று நான் கருதினேன்”  என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles