Sunday, March 3, 2024

கணவருடன் தகராறு: பிள்ளைகளை பாலத்தில் விட்டுவிட்டு ஆற்றில் குதித்த தாயார்!

கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து, இரு பிள்ளைகளையும் பெந்தர பாலத்தில் விட்டுவிட்டு பெண் ஒருவர் ஆற்றில் குதித்துள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் பெண் எல்பிட்டிய ஊரகஸ்மன்ஹந்தி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ள நிலையில் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று பிற்பகல் 9 வயது மகன் மற்றும் 1 வயது மற்றும் 6 மாத மகள் ஆகியோரை பெந்தர பாலத்தில் விட்டுவிட்டு, சுமார் 40 அடி உயரத்தில் இருந்து தாயார் ஆற்றில் குதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்த்தேக்கத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை அருகில் நின்ற இளைஞர் ஒருவர் காப்பாற்றியதாக கூறப்படுகிறது

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles