Sunday, May 19, 2024

அவுஸ்திரேலிய தூதரகத்திற்கு ஜனாதிபதி விஜயம்.!

7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அவுஸ்ரேலியாவின் பேர்த் நகருக்குச் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மேற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு நேற்று (10) விஜயம் செய்தார்.

தூதரகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை கொன்சல் ஜெனரல் கலாநிதி ரொஷ் ஜலக்கே மற்றும் திருமதி பிரியங்கா கமகே ஆகியோர் வரவேற்றனர்.

அதன் பின்னர், கொன்சல் ஜெனரல் மற்றும் ஊழியர்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வமாக உரையாடியதுடன், இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் அவர்கள் ஆற்றக்கூடிய செயலூக்கமான பங்களிப்பு குறித்தும் விரிவான கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டார்.

Related Articles

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles