Thursday, November 30, 2023
dailymirror dailymirror lk dailymirror sri lanka dailymirror news dailymirror epaper
- Advertisement -spot_img

Most Popular

BATTI NEWS

பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து மாணவன் மீது தாக்குதல்!!

செல்வாக்குள்ள நபரொருவர் பாடசாலைக்குள்  அத்துமீறி நுழைந்து மாணவனை தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் காயமடைந்த மாணவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று 27.10.2023ம் திகதி மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் இடம்பெற்றுள்ளது. பாடசாலையில் வகுப்பறைக்கற்றல் இடம்பெற்ற வேளை வகுப்பாசிரியர் மற்றும் சக மாணவர்கள் முன்னிலையில் பிறதொரு மாணவனின் தந்தை வகுப்பறைக்குள் நுழைந்து தாக்குதல் நடாத்தியுள்ளார். குறித்த மாணவன் மயக்கமடைந்த நிலையில் சக மாணவரின் முதலுதவியில் மயக்கம் தெளிந்து வீடு சென்ற போது உடல் சோர்வு மற்றும் நோவு காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சைப்பிரிவில் உள்ளார். குறித்த மாணவன் ஒன்பதாம் தரத்தில் கற்று வருபவர். தாக்குதலாளி மட்டக்களப்பில் நீதிமன்றில் பணி புரியும் உத்தியோகத்தர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன் என அம்பிட்டியே அட்டகாசம்.. வீடியோ

அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன். என்ன செய்கிறார்கள் என பார்ப்போம் என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதிக்கு இன்று மாலை சென்ற அம்பிட்டிய சுமனரத்ன தேரர், தமிழர்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்டோரை எச்சரிக்கும் வகையில் கடும் தொனியில் கத்தி கூச்சலிட்டதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இருயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள சிங்கள மயானத்தில் வீடு உடைத்த கழிவுப்பொருட்கள் போடப்பட்டுள்ள நிலையில் அங்குவந்த அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அதற்கு எதிராக கடுமையான வார்த்தைப்பிரயோகங்களை கொண்டு பேசினார். இதன்போது அப்பகுதிக்கு வந்த பொலிஸார் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்துசெல்லவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். குறித்த பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பாக குறித்த கட்டிட இடிபாடுகள் கொட்டப்பட்ட நிலையில் அவற்றினை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையினை எடுப்பதாக மாநகரசபை ஆணையாளர் சுமனரத்ன தேரரிடம் நேற்று தெரிவித்திருந்தாகவும் எனினும் அவர் இன்று அங்கு சென்று இவ்வாறான செயற்பாடுகளில் […]

இன்றைய ராசிபலன்கள் – 22.10.2023

இன்றைய பஞ்சாங்கம் 22-10-2023, ஐப்பசி 05, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி இரவு 07.59 வரை பின்பு வளர்பிறை நவமி. உத்திராடம் நட்சத்திரம் மாலை 06.44 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் அமிர்தயோகம். மஹாஷ்டமி. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. இன்றைய ராசிபலன்கள் – 22.10.2023 மேஷம் இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் […]

பொலிஸாருடன் குழப்பத்தில் ஈடுபட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரர்

புத்தர் சிலையை தான் பார்க்க வேண்டுமெனவும் அங்கு செல்ல எனக்கு அனுமதிக்க வேண்டுமெனவும் அம்பிட்டிய சுமண ரத்தன தேரர் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அண்மையில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யஹம்பத் உள்ளிட்ட குழுவினர் புத்தர் சிலையை வைத்துள்ளனர். இந்நிலையில், குறித்த புத்தர் சிலை அங்கு இல்லையென செய்திகள் வெளியிாகி இருந்த நிலையில், அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் குறித்த இடத்திற்கு இன்று சென்றுள்ளார். ஆனால் அங்கு பதற்ற நிலைமை உருவாகும் சாத்தியம் காணப்பட்டதால் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதனால் குறித்த பகுதிக்கு செல்வதற்கு அம்பிட்டிய சுமணரத்தன தேரருக்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையிலேயே அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். புத்தர் சிலையை நான் பார்க்க வேண்டும். அங்கு செல்ல எனக்கு அனுமதிக்க வேண்டும் என பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட […]

கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

மட்டக்களப்பு கல்லடி, நொச்சிமுனை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்துவந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவம் இன்று (19-10-2023) காலை இடம்பெற்றுள்ளது. கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் 2ம் வருடத்திற்கான பல்கலைக்கழக கல்வியினை தொடர்ந்துவந்த 22 வயதான மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் மட்டக்களப்பு போரதீவுப்பற்று திருப்பழுகாமம் கிராமத்தை பூர்விகமாக கொண்டதுடன் கண்டி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்ததுடன் பல்கலைக்கழக கல்வியை நொச்சிமுனையிலுள்ள சித்தியின் வீட்டில் தங்கியிருந்து தொடர்ந்து வந்த நிலையிலையே இந்த விபரித முடிவினை எடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

HEALTH NEWS

Must Read

.dailymirror - Dailymirror News - 24x7 Daily mirror Breaking News Websiteampara-comdailymirror - Dailymirror News - 24x7 Daily mirror Breaking News Websitedailymirror dailymirror lk dailymirror sri lanka dailymirror news dailymirror epaper dailymirror dailymirror lk dailymirror sri lanka dailymirror news dailymirror epaper.